இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த செல்லூரைச் சேர்ந்த விஜய் என்பவர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கை விசாரணை செய்த இராமநாதபுரம் மாவட்ட விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி குற்றவாளி விஜய்க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்கள். மேலும் திறம்பட செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த காவல்துறையினரை இராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS, அவர்கள் பாராட்டினார்கள்.
















