இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் RS மங்களம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் (11). வயது சிறுமியை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் என்பவருக்கு இராமநாதபுரம் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி செல்வி.கவிதா அவர்கள் 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2000/- அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்கள். திறம்பட செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த காவல்துறையினர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் திருமதி.கீதா ஆகியோரை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் பாராட்டினார்கள்.