திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியைச் சேர்ந்த பர்கத் மகபூப் ஜான் மகன் ஷேக் முகமது (29). பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், வனிதாவின் வேண்டுகோள் படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப. ஆட்சியருக்குப் பரிந்துரைத்தார். அதை ஏற்று ஆட்சியர் இரா.சுகுமார் உத்தரவிட்டார். இதையடுத்து, ஷேக் முகம்மது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் திருநெல்வேலி மத்திய சிறையில் (11.08.2025) அன்று அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்