திண்டுக்கல் : 06.05.2022 திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (11.04.2022), அன்று 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, வழக்கில் பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த தங்கப்பாண்டி (25), என்பவரை போக்சோ சட்டத்தில், பழனி தாலுகா காவல் நிலைய காவல் துறையினர் , கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் குற்றவாளி தங்கப்பாண்டியின், குற்ற செயல்களை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன், அவர்களின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தங்கப்பாண்டியை ,குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில், அடைக்க உத்தரவிட்டார்.
உத்தரவைத் தொடர்ந்து, பழனி தாலுகா காவல் நிலைய காவல் துறையினர், தங்கப்பாண்டியை குண்டர் தடுப்பு சட்டத்தின், கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா