திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வக்கம்பட்டி என்ற சிறு கிராமத்தில் பொதுமக்களுக்கு கல்வி என்பது எவ்வாறு வாழ்க்கைக்கு உதவுகிறது என்றும், அதன் முக்கியத்துவத்தை பற்றி தெரிந்து கொள்ளவும், கல்வியினால் கிடைக்கும் பயன்களைப்பற்றி புரிந்து கொள்ளவும், கல்வியின் அவசியம் பற்றி அறிந்து கொள்ளவும் கடந்த ஆண்டு பாலா படிப்பகம் என்ற பெயரில் ஒரு நூலகம் ஆரம்பிக்கப்பட்டு, அதன் நிறுவனராகவும், தலைவராகவும் உள்ள நமது திருநெல்வேலி சரகக் காவல்துறை துணைத் தலைவர் முனைவர் பா. மூர்த்தி, இ.கா.ப., அவர்களின் சீரிய எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்டு ஆலம் விழுது போல் பரவி நிற்கிறது. இந்நூலகத்தில் மாணவ, மாணவிகளுக்கு பயன் தரக்கூடிய பல விஷயங்கள் தெரிந்து கொள்ள மிகப் பிரமாண்டமாய் உருவாக்கப்பட்டுள்ளது. அதனுடைய முதலாம் ஆண்டு வெற்றிவிழா இன்று நடைபெற உள்ளது. வக்கம்பட்டி, பொதுமக்களின் கல்வி அறனாய் விளங்கும் இந்த பாலா படிப்பகம் மென்மேலும் பல பட்டதாரிகளை உருவாக்கி வக்கம்பட்டி கிராமத்திற்கும், திண்டுக்கல் மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று நமது போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பில் வாழ்த்துகிறோம்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்