திண்டுக்கல்: திண்டுக்கல் புவியியல் சுரங்கத்துறை அலுவலக உதவி இயக்குனர் செல்வசேகர் தலைமையிலான அதிகாரிகள் குஜிலியம்பாறை அருகே பாளையம் பகுதியில் கனிம வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது பாளையம் பகுதியில் காளியப்பன் என்பவரது இடத்தில் உள்ள பாறையில் அனுமதியின்றி கற்கள் உடைக்கப்படுவதை கண்டனர். அப்போது 6 அடி நீளம் கொண்ட 21 கற்களை லாரியில் ஏற்றி கொண்டிருந்தனர். வாகனத்துடன் பறிமுதல் செய்த அதிகாரிகள் குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து குஜிலியம்பாறை காவல்துறையினர் நில உரிமையாளர் கே.ஆர்.காளியப்பன் , வாகன ஓட்டுநர் தங்கராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா