திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி அருகே கருத்தநேரி குளத்தில் அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள் அங்கிருந்த பாறைகளை திருட்டுத்தனமாக வெட்டி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கிராம நிர்வாக அதிகாரி மற்றும் தலையாரியை கண்டவுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய ஹிட்டாச்சி உட்பட வாகனங்களை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகாரின் பேரில் ஏர்வாடி காவல் ஆய்வாளர், சுதா வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்ததோடு கடத்தலில் ஈடுபட்ட ஒரு நபரை கைது செய்து, மீதி நான்கு நபர்களை தேடி வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்