திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் நிலையங்களில் ஒப்படைக்குமாறு திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்.பிரதீப் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர்.சந்திரமோகன் முன்னிலையில் 88 துப்பாக்கிகளும்,நத்தம் காவல் நிலைய ஆய்வாளர். தங்க முனியசாமி,சாணார்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர். ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 25 துப்பாக்கிகளும், திண்டுக்கல் மாவட்டத்தில் 36 போலீஸ் நிலையத்தில் 978 துப்பாக்கிகளும் அந்தந்த காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா