திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரில் தச்சநல்லூர் காவல் சரகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக (22.08.2025) ம் தேதி நடைபெற இருக்கும் பூத் கமிட்டி மாநாடு நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி மாநகர காவல்துறை அனுமதி மறுப்பதாக செய்தி ஒன்று பாரதிய ஜனதா கட்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி மாநாட்டிற்கு காவல்துறை சார்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அறிவுறுத்தல்கள் படி மாநாட்டிற்கான விளம்பர பதாகைகளை அமைக்க மாநகர காவல் துறை சார்பாக மாநாடு அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் மேற்கூறிய அறிவுறுத்தலை மறைத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிடப்பட்டுள்ளது என மாநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்