தருமபுரி : தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த கேசவன் இவர் (16) வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு பேசி வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சிறுமியுடன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கேசவன் மற்றும் சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் கேசவனை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.