திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 29ஆம் தேதி திரு ஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வான ஏப்ரல் மூன்றாம் தேதி முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவமும், ஏழாம் திருவிழாவான ஏப்ரல் நான்காம் தேதி மாலை 4. 45 மணிக்கு கிரிவீதியில் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு வசதிகள் குறித்தும், தேரோட்டம் நடைபெறும் அடிவாரம், கிரிவீதி, சன்னதி வீதி பகுதிகளில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆய்வு மேற்கொண்டனர் உடன் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
