சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தனியார் தங்கும் விடுதிகளுக்கான விதிமுறைகள், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகள் தனியார் திருமண மண்டபத்தில் காவல்துறையினரால் நடத்தப்பட்டது. இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி காரைக்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது., கலந்தாய்வு கூட்டத்தில் தனியார் தங்கும் விடுதிகளில் சந்தேகத்துக்குரிய நபர்கள் நடமாட்டம் இருந்தால் காவல்துறைக்கு ரகசிய தகவல் கொடுத்தல், விடுதியின் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல், சூதாட்டம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு விடுதியில் அனுமதி வழங்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு சட்ட ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை கலந்த ஆலோசித்து. விடுதி உரிமையாளர்களுக்கு பல்வேறு நெறிமுறைகள் வழங்கப்பட்டது. மேலும் இவைகளை மீறி சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் விடுதி உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையால் எச்சரிக்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் விடுதி உரிமையாளர்கள், விடுதி ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி