திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் வழியாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்க திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., அறிவுறுத்தலின்படி காவல் துணை ஆணையர்கள் V.கீதா,(மேற்கு) V.வினோத் சாந்தாராம்,(கிழக்கு) காவல் உதவி ஆணையர் கணேசன், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள், செல்லத்துரை, மணிமாறன், மற்றும் காவலர்கள் தலைமையில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதில் ஒருவர் பின் ஒருவராக சாலையின் ஓரமாக நடந்து செல்லவும் தங்களின் உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. பாதயாத்திரை செல்பவர்கள் பெரும்பாலும் இரவு நேரத்தில் சாலையோரமாக நடந்து செல்வதால் விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் அவர்களின் பைகளில் வெள்ளை, சிகப்பு நிற ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டி தகுந்த அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்