கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் தரம் தாழ்ந்து பேசியதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை கண்டித்து ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு (26.11.2024) காலை 10:55 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் 11.00 மணிக்கு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ஓசூர் தளி ரோட்டில் உள்ள V.J திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 55 கட்சிக்காரர்களில் 32 நபர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டார்கள்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்