திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் கடந்த 12ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற 8வயது சிறுமியை மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுமிக்கு கொடுமை நடந்து 10 நாட்கள் ஆகியும் இன்னும் குற்றவாளியை கண்டுபிடிக்காத நிலையில் குற்றவாளி குறித்த தகவல் தெரிந்தால் பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளிக்குமாறு மாவட்ட காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த நிலையில் ஆரம்பாக்கத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்கிட வேண்டும் எனவும் குற்றவாளியை உடனே கைது செய்ய வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு