திருநெல்வேலி : திருநெல்வேலி மேலப்பாளையத்தை சேர்ந்த அபுதாகீர் (49). முன்னீர்பள்ளம் பொன்னாக்குடியில் சுதர்சன் நகரில் பழைய பேப்பர் குடோன் வைத்துள்ளார். (31.12.2024) அன்று திருநெல்வேலி டவுனை சேர்ந்த நம்பி குமார் (43). பேட்டையை சேர்ந்த அப்துல் வியாசர் அலி (41). பேட்டை, ஆதாம் நகரை சேர்ந்த அஜிஸ்மைதீன் (42). பேட்டை மேலத்தெருவை சேர்ந்த பால் முகமது யாசீன் (38). ஆகியோர் சேர்ந்து தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு அபுதாகீரிடம் சுகாதாரத் துறையில் இருந்து பேசுவதாக கூறி நீங்கள் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து வியாபாரம் செய்வதாக புகார் வந்துள்ளது. அதனால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க எங்களுக்கும், மேல் அதிகாரிகளுக்கும் ரூபாய் 10 லட்சம் தர வேண்டும் என கேட்டு மிரட்டி உள்ளனர். இது குறித்து முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் அபுதாகிர் அளித்த புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் சினேகாந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நான்கு நபர்களையும் (03.01.2024) அன்று கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்