திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி கனகவல்லிபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பழைய பேப்பர், கோணி, பிளாஸ்டிக் சேகரிக்கும் கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில் திடீரென தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. கரும்புவை சூழ்ந்து வானுயர தீப்பற்றி எரிந்து வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீ அருகில் உள்ள வயல்வெளிக்கும் வீடுகளுக்கும் பரவாத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பழைய பேப்பர், கோணி சேகரிப்பு கிடங்கில் இருந்த பேப்பர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், கோணி, பஞ்சு உள்ளிட்டவை கொழுந்து விட்டு எரிந்து வருவதால் இப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சு அடித்து தீயை முழுவதுமாக அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு