திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவிலில் உள்ள தியான மண்டபத்தில்,விடுதலை அறக்கட்டளை மூலம் போதை விழிப்புணர்வு. மற்றும் பனை விதை நடவுகளுக்காக தமிழக அரசின் சான்றுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் 2024 ஆம் ஆண்டின் பசுமை முதன்மையாளர் விருது பெற்ற மகாலிங்கம் அவர்களின் சேவையை பாராட்டும் விதமாக ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவில் அறங்காவலர் பி.எஸ். பழனியப்பன் தலைமையில். திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் காளிராஜ் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினார். பழவேற்காடு கிராம நிர்வாக அலுவலர்பழனிச்சாமி,தச்சூர் கூட்டுச்சாலை லயன்ஸ் கிளப் நடராஜன், லைட் ஹவுஸ் பகுதியில் அமைந்துள்ள வள்ளலார் கருணாளைய மடாதிபதி ராஜி ஆகியோர் முன்னிலை வகிக்க பள்ளிக் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு