திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் வருகின்றனரா? என சோதனை நடத்தி வருகின்றனர். மலைக்கோவிலில் உள்ள தங்க கோபுரத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இதே போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மசூதி, தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வணிக வளாகங்கள், திரையரங்குகள், பஸ் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் சீருடை அணியாத போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா