திண்டுக்கல் : அனைவரும் ஒன்று சேர்வோம்! போதையை விரட்டுவோம்! ஆரோக்கியம் வெல்வோம்! பழனியில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த அனைவருக்கும் ஒரு அரிய வாய்ப்பு. போதை உன்னை மட்டுமல்ல உன்னைச் சுற்றி உள்ளவர்களையும் அழிக்க கூடியது. ஊர் கூடி தேர் இழுப்போம் என்பதை போல பழனி வாழ் மக்கள் கூடி போதையை ஒழிக்க கரம் இணைவோம். பழனி நகர் முழுவதும் போதையை ஒழிக்க மினி மாரத்தான் நடைபெற உள்ளதால் போதை ஒழிக்க ஆர்வம் உள்ள பழனி நகரில் குடியிருக்கும் அனைவரும் வயது வித்தியாசம் இன்றி கலந்து கொண்டு போதை பழக்கத்தில் உள்ளவர்களை மீட்டெடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி பல இளைய தலைமுறையினரை காக்க சிறு முயற்சியாய் ஓடுவோம் போதைக்கு எதிராக. (25/06/2023)ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 05.30 மணி முதல் பெயர் பதிவு நடைபெறும். முதலில் பதிவு செய்யும் 400 நபர்களுக்கு டீசர்ட் வழங்கப்படும்) இடம்: பழனி நகர காவல் நிலையம் பழனி நகர காவல் துறை
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி