திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி உட்கோட்ட பகுதியில் கடந்த ஒரு வருடத்தில் கஞ்சா தொடர்பாக 281 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 300க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனுடன், கணிசமான அளவில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 100க்கும் மேற்பட்ட நபர்கள் கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட காவல்துறையின் போதைப்பொருட்களுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளின் விளைவாக, முந்தைய ஆண்டை விட 255.98 சதவீதம் அதிகமாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் 9498101552 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.“கஞ்சா மற்றும் போதைப்பொருள் இல்லாத நகரமாக பழனியை மாற்றுவோம்” என்ற இலக்குடன் காவல்துறை தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என பழனி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. தனன்ஜெயன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















