திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி அண்ணாநகரை சேர்ந்த சதீஷ் ஆனந்த் ( 52), இவர் பழனியில், தாராபுரம் சாலையில் நகைக்கடை வைத்துள்ளார். சதீஷ் ஆனந்த் தனது வணிக வளாகத்துக்கு சென்றார். அங்கு வணிக வளாகத்தின் அருகில் தியேட்டர் ஊழியர்கள் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சதீஷ் ஆனந்துக்கும், தியேட்டர் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தியேட்டர் ஊழியரான பழனி சத்யாநகரை சேர்ந்த ரங்கசாமி (55), திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சதீஷ் ஆனந்தை குத்தினார். இதனையடுத்து அவர் உயிர் பிழைக்க ஓடினார். இருப்பினும் ஓட, ஓட விரட்டி சதீஷ் ஆனந்தை சரமாரியாக கத்தியால் குத்தினார். மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் நடந்த இந்த காட்சியை கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்தியால் குத்திய ரங்கசாமி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தியேட்டர் உரிமையாளர் நடராஜன் (82), சரவணன் (46), பழனிசாமி (45) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.