திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் துணை கண்காணிப்பாளர். தனஞ்ஜெயன் உத்தரவின் பேரில் பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர். மணிமாறன் தலைமையில் சார்பு ஆய்வாளர்.விஜய் காவலர்கள் செந்தில்முருகன், சரவணன், செல்வகுமரன், மணிகண்டன் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பழனி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பின்புறம் உள்ள மைதானத்தில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 6 பேர் காவல் துறையினரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்தனர். சுற்றி வளைத்து பிடித்த போலீசார் அவர்களை விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் பழனியை சேர்ந்த பிரபு(22). பரத்ராஜ்(20). ஹரிபிரகாஷ்(23). முகசூரியா(22). கோகுல்(23). தியாகராஜன்(22). என்பதும் இவர்கள் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்ததை தொடர்ந்து பகாவல்துறையினர் 6 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சா 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா