திண்டுக்கல்: பழனி இரயில்வே பீடர் சாலை பகுதியில், மாலை நேரங்களில் இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் அதிவேகமாக செல்வதாக காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்செயன் அவர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் மணிமாறன் உத்தரவின்படி, பழனி நகர் சார்பு ஆய்வாளர் விஜய் தலைமையில், காவல்துறையினர் ரோந்து சென்றனர். அப்பொழுது இருவர் இருசக்கர வாகனத்தில் வந்ததை அறிந்து. அவர்களை விசாரணைக்கு அழைத்தார். காவல்துறையை கண்டவுடன் அவர்கள் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு, வெவ்வேறு திசையில் தப்பிசென்றனர்.
ஒருவர் வள்ளுவர் திரையரங்கு பின்புறம் உள்ள கல்லறையிலும், மற்றொருவர் அருகில் இருந்த சந்து பகுதியில் சென்று தப்பி ஓட முயற்சி செய்தனர். இருவரையும் சார்பு ஆய்வாளர் விஜய் தலைமையிலான காவலர்கள் சரவணன், அழகுமணி, செந்தில் முருகன், மகேஸ்வரன் மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டதில், அவர் இருவரிடம் இருந்தும் சுமார் 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 100 கிராம் கஞ்சா & வாகனம் பறிமுதல்
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















