நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்க்கைதர்த்தை மேம்படுத்தும் வகையில் காவல் துறை சார்பில் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக (30.12.2022) கூடலூர் உட்கோட்டம் மசினகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவநல்லா அரசு உண்டு உறைவிடப்பள்ளி வளாகத்தில் காவல் துறை சார்பில் அமைக்கப்பட்ட பழங்குடியின மேம்பாட்டு மையத்தை நீலகிரி மாவட்ட ஆட்சியர் திரு.S.P.அம்ரித், இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் பழங்குடியின மாணவ மாணவிகள் பயன் பெறும் வகையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த பழங்குடியின பண்பாட்டு மையத்தில் இருக்கும் உடற்பயிற்சி கூடத்தினை பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி மசினகுடி பகுதியில் இருக்கும் இளைஞர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் மசினகுடி பகுதியில் உள்ள மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டு பயன் பெறும் வகையில் தேவையான புத்தகங்கள் இந்த பண்பாட்டு மையத்தில் உள்ளது. இந்நிகழ்சியின்போது நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆஷிஸ் ராவத், இ.கா.ப மற்றும் காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.