இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளதால், மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் தரம் குறித்த ஆய்வு நடைபெற்றது. இந்நிகழ்வை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ், IPS., அவர்கள் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்கள். அப்போது பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், இந்த ஆய்வின் போது பள்ளி வாகனங்களில் குறைபாடு கண்டறியப்படும் பட்சத்தில் அதனைச் சரி செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டு பள்ளி திறப்பதற்கு முன்னர் மீண்டும் ஆய்விற்கு சமர்ப்பித்து சான்று பெற்றால் மட்டுமே பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றார். ஆய்வின் போது வாகனங்களின் பிரேக் திறன், டயர்கள் நிலை, அவசரக் கால கதவுகளின் இயக்கம், வாகனங்களின் வேகக்கட்டுப்பாடு கருவி ஆகிய அனைத்து ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு.ஷேக் முகமது மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், மொத்தம் 549 வாகனங்களை ஆய்வு செய்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி