அரியலூர்: பள்ளிகளின் முன்பு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், சாலை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, பள்ளி வளாகங்களுக்கு அருகே வேகக் கட்டுப்பாட்டு பலகைகள், ஜீப்ரா கிராஸிங், வேகத் தடுப்புகள், சாலை குறியீடுகள், போக்குவரத்து ஒழுங்குமுறை போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக உள்ளனவா என்பதையும், மேலும் மேம்படுத்த வேண்டிய அம்சங்கள் குறித்து அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மாணவர்களின் உயிர் பாதுகாப்பை முன்னுரிமையாகக் கொண்டு, தேவையான இடங்களில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.















