திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்,இ.கா.ப., உத்தரவின்படி, காவல்துறையினர் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி (06.09.2024) நாங்குநேரி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார், இ.கா.ப., தலைமையில் நாங்குநேரி, களக்காடு, ஏர்வாடி, மூன்றடைப்பு, விஜயநாராயணம் போன்ற பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகள் மூலம் சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இவ்விழிப்புணர்வு பேரணியில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும், ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் , மது அருந்திவிட்டு மற்றும் செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டுவது குறித்தும், இருசக்கர வாகனத்தை பயன்படுத்தும் போது தலைக்கவசம் கட்டாயம் அணிந்து இருசக்கர வாகனங்களை இயக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்