திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., உத்தரவின்படி காவல் துணை ஆணையர்கள் V.கீதா, (மேற்கு), G.S.அனிதா, (தலைமையிடம்) S.விஜயகுமார், (கிழக்கு) ஆகியோரின் மேற்பார்வையில், (28.11.2024) அன்று பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், அந்தோணி ஜெகதா, மற்றும் காவல் துறையினர் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதை தடுப்பது, குற்றங்கள் நடந்தால் செயல்பட வேண்டிய நடவடிக்கைள், (உதவி எண் :1098,181) மற்றும் பாலியல் ரீதியான குற்றங்கள் சம்பந்தமாகவும், போக்சோ சட்டம் பற்றியும், மது மற்றும் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்