திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பெருமாள்மலை அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு பயின்று வந்த கேரளாவைச் சேர்ந்த கீர்த்தனா (15). என்ற மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவி கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதை கவனித்த விடுதி காவலர் உள்ளிட்டோர் உடனடியாக அவரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கொடைக்கானல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















