நெல்லை: திசையன்விளை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவி.இவரது தந்தை புதியதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டில் கொத்தனார் வேலை பார்த்த தூத்துக்குடி மாவட்டம், முள்ளகாட்டைச் சேர்ந்த புஷ்பராஜ்(30) என்ற வாலிபர், அச்சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புஷ்பராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் மாணவி மீட்கப்பட்டு நாங்குநேரியில் உள்ள மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.