திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.மீனா அவர்கள், மற்றும் தொழில்நுட்ப சார்பு ஆய்வாளர் திரு.லாய்டு சிங் அவர்கள் மற்றும் காவலர்கள் சார்பில் பழனியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் கணினி குற்றங்கள் குறித்தும், அவற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும், மேலும் பெண்கள் சமூக வலைதளங்களில் தங்களது தனிப்பட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டாம் எனவும், அறிமுகம் இல்லாத நபர்களிடம் வீடியோ கால் மூலம் பேச வேண்டாம் எனவும், சமூக வலைதளங்கள் பயன்படுத்தும் பெண்கள் மிகவும் கவனமாக இருக்கும் படியும், மேலும் இணைய வழி குற்றங்கள் குறித்து புகார் செய்ய 1930 என்ற எண்னை அழைக்கும் படியும், இணையதளம் வாயிலாக புகார் செய்ய www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தும் படியும் அறிவுரை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.