திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., உத்தரவின் படி, காவல் துணை ஆணையர்கள், வினோத் சாந்தாராம், விஜயகுமார், மேற்பார்வையில், மாநகர பகுதிகளில் இணையவழி குற்றங்கள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக (12.03.2026) அன்று மாநகர சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளர், செல்வி சுவாதிகா தலைமையில் சைபர் கிரைம் காவல்துறையினர் திருநெல்வேலி டவுண் மாநகராட்சி பெண்கள் மேல் நிலை பள்ளியில் (கல்லணை பள்ளி) மாணவியர்களிடம், இணையவழி குற்றங்கள், சமூக வலைதளங்களை பாதுகாப்பாக கையாள்வது, குற்றங்கள் நடைபெற்றால் உடனடியாக சைபர் கிரைம் இலவச உதவி எண்:1930 அல்லது https://cybercrime.gov.in/ புகார் அளிக்க வேண்டும் என விழிப்புணர்வு வாசகங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















