தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் (14.06.2025) குளத்தூர் பஜார் பகுதியில் பள்ளி மாணவிகளிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போக்சோ சட்டம், குழந்தை திருமண தடைச் சட்டம், குழந்தைகள் உதவி எண் 1098, பெண்கள் உதவி எண் 1091 மற்றும் போதைப் பொருள் தடுப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.