திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அரசுப் பள்ளியில்
பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவர் தன்னுடன் பயின்று வரும் சக மாணவியிடம் கைப்பேசியில் பேசி வந்துள்ளார். இப்பிரச்சனை தொடர்பாக அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவியின் சகோதரர், அவரது நண்பர்கள் என 5 சிறார்கள் சேர்ந்து பிளஸ் 2 மாணவரை அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதில் காயமடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக சேரன்மகாதேவி காவல்துறையினர் வழக்குப் பதிந்து 5 சிறார்களையும் கைது செய்து கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.]
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்