விருதுநகர்: விருதுநகர், காரியாபட்டி செயின்ட் மேரீஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியின் 39 ஆவது விளையாட்டு விழா நடைபெற்றது. S.G டேனியேல் ஓய்வு பெற்ற விளையாட்டு இயக்குனர், பசுமலை மேல்நிலைப் பள்ளி, விளையாட்டு இயக்குனர் டேனியல் தலைமை வகித்தார். விழாவில், தேசியக் கொடி மற்றும், ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து விழா துவங்கப்பட்டது.
மாணவர்களின் அணி வகுப்பு , கராத்தே, சிலம்பம், யோகா, மனித கோபுரம் போன்றவற்றை மாணவர்கள் நடத்தி காண் பித்தனர். தங்களது போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழாவில், பள்ளித் தாளாளர் கீதா , முதல்வர் இமாகுலேட் , துணை முதல்வர் கயல்விழி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி