மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி மேட்டுப் பெருமாள் நகர் விஷ்வ பாரதி வித்யா மந்திர் ஆங்கில நர்சரி பிரைமரி பள்ளியில் 29 வது ஆண்டு விளையாட்டு விழா பரிசளிப்பு நடந்தது. இந்த விழாவிற்கு, போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமை தாங்கி அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு விளையாட்டு போட்டிகளை தொடக்கி வைத்து சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். பள்ளி முதல்வர் எஸ் .எஸ். குபேந்திரன், துணைத் தாளாளர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சாமிலி வரவேற்றார். இந்த விளையாட்டுப் போட்டியில் ,
மாணவ மாணவிகள் நாற்காலி, குடை வடிவ உடற்பயிற்சிகள், பிரமிடுகள், பாட்டிலில் நீர் நிரப்புதல், சிறுவர் ஒட்டம், உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில், ஏராளமான பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில், ஆசிரியர் அனிதா நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி
















