மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாதம்பட்டி மேட்டுப் பெருமாள் நகர் விஷ்வ பாரதி வித்யா மந்திர் ஆங்கில நர்சரி பிரைமரி பள்ளி 28 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. இந்த விழாவிற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமை தாங்கி தேசிய கொடியேற்றி அணிவகுப்பு மரியாதை ஏற்று விளையாட்டு போட்டிகளை தொடக்கி வைத்தார். முதல்வர் எஸ் எஸ் குபேந்திரன் வரவேற்றார். இந்த விளையாட்டு போட்டியில் மாணவ-மாணவிகள் வண்ண குடையுடன் நடனமாடி வரவேற்றனர். வண்ண பலூன்கள், வண்ணத்துணிகள் விளையாட்டு சாகச பயிற்சியும், தேசிய கொடியுடன் பிரமீடு மற்றும் ஓட்டப்பந்தயம், பாட்டிலில் நீர் நிரப்புதல், இசை நாற்காலி, அதிர்ஷ்ட வட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு
வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் திவ்யா, சரஸ்வதி ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். இதில் ஏராளமான பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் முடிவில் ஆசிரியை மீனா நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி