திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப. உத்தரவுப்படி, காவல் துணை ஆணையர், S.விஜயகுமார் (மேற்கு) மேற்பார்வையில், (26.02.2026) அன்று மாநகர சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளர், செல்வி சுவாதிகா தலைமையில் சைபர் கிரைம் காவல்துறையினர் பாளையம்கோட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு இணையவழி குற்றங்கள் குறித்தும், சமூக வலைதளம் மூலம் நடைபெற்றுவரும் வேலைவாய்ப்பு மோசடி அனைத்து இணையவழி குற்றங்கள் மற்றும் பண மோசடி நடைபெற்றால் உடனடியாக சைபர் கிரைம் இலவச உதவி எண்:1930 அல்லது https://cybercrime.gov.in/ புகார் அளிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு வாசகங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















