மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா கருப்பட்டி ஊராட்சியில் வாடிப்பட்டி வட்டாரத்தில் உள்ள மன்னாடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திக்கு உட்பட்ட கருப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலை பள்ளியில் புகையிலை இல்லா இளைய சமுதாயம் 2.0 குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், முத்து ராஜ், சுகாதார ஆய்வாளர்கள், சதீஸ், புவனேஸ்வரன், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்,புகையிலை கட்டுபாட்டு மையம் மதுரை சமூக பணியாளர் ரதிஸ்மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பேரணி நடத்தினர். இறுதியில் பள்ளி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் புகையிலை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது