விருதுநகர் : விருதுநகர் அருகே, காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பேரூராட்சித் தலைவர் திரு.செந்தில், மாணவிகளிடம் கேட்டு தெரிந்துகொண்டார். காரியாபட்டி அரசு பெண்கள் பள்ளியில், மாணவிகளிடம் குறைகளை தலைவர் திரு. செந்தில், கேட்டறிந்தார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில், அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பேரூராட்சித் தலைவர் திரு. செந்தில், செயல் அலுவலர் திரு. ரவிக்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் திரு. லியாகத் அலி ஆகியோர் பள்ளிக்கு தேவையான குடிநீர்வசதி, கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், குறித்து ஆய்வு செய்தனர். இது குறித்து அமைச்சர் திரு. தங்கம், தென்னரசுவிடம், தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பேரூராட்சித் தலைவர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி