சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் நகர் போக்குவரத்து காவல் நிலையம் மாவட்ட சாலை பாதுகாப்பு படை இணைந்து சாலை விழிப்புணர்வு தேவகோட்டை டிஎஸ்பி பார்த்திபன் தலைமையேற்று போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகளுக்கு எடுத்துரைத்தார். ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு சிறப்பு பரிசு மற்றும் மரக்கன்றுகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை அருட்சகோதரி சார்லஸ் மேரி, உதவி தலைமை ஆசிரியை அருட்சகோதரி குடியரசு, அருட்சகோதரி பிரான்சிஸ் சேவியர் மேரி, ஆசிரியர்கள், நகர் காவல் நிலைய ஆய்வாளர் கணேசமூர்த்தி போக்குவரத்து ஆய்வாளர் பாண்டியன்,சார்பு ஆய்வாளர்கள் கலா, அசோகன், மாவட்ட சாலை பாதுகாப்பு படை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் மணிமாறன் தேவகோட்டை நேசக்கரங்கள் அமைப்பினர், பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விமலா மேரி, மாணவிகள்,கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி