சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை 16வது தொகுதி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. ஆசிரியர் ராமராஜ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி.பூரண சந்திர பாரதி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பெண் குழந்தைகள் எவ்வாறு விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.யாரேனும் உங்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்தால் பெற்றோர்கள். ஆசிரியர்கள். அல்லது காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் உங்களது ரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் கூறி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து. பள்ளியில் நடந்த உலக அமைதிக்கான வரைபடப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் அகிலேஷ். மோகித் சூரியா. ஆகாஷ். ஆகிய மூன்று மாணவர்களுக்கு சார்பு ஆய்வாளர் திருமதி. பூரண சந்திர பாரதி. நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் காவலர் சொர்ணவள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. விவேக்