விருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோ பஸ்கான் அப்துல்லா அறிவுறுத்தலின் பேரில், விருதுநகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சூரிய மூர்த்தி மேற்பார்வையில், மனித வர்த்தகம் மற்றும் ஆள் கடத்தல் தடுப்புப்பிரிவு சார்பு ஆய்வாளர் மற்றும் குழந்தை கடத்தல் தடுப்புப்பிரிவு காவலர் குழு மூலம் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் பள்ளி படிப்பை இடைநிற்றல் செய்த 15 மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களுக்கு பள்ளி படிப்பின் முக்கியத்துவத்தை
எடுத்து கூறி அறிவுரை வழங்கியதில், (26.02.2024)ம் தேதி ரோகித் இந்திரா காலனி, T.மானசேரி மற்றும் புஷ்பாண்டியவர், நிறைமதி, சிவகாசி ஆகிய இரு மாணவர்கள் பள்ளி படிப்பை தொடர மீண்டும் பள்ளியில் சேர்ந்துள்ளனர். என்ற விபரத்தை விருதுநகர் மாவட்ட
காவல் கண்காணிப்பாளர் அலுலவக செய்தி குறிப்பில் தெரியப்படுத்தப்படுகிறது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி