மூன்றடைப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதகுளம் பகுதியில் தவறுதலாக சிகிச்சை அளித்து ஒருவர் உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த இரண்டு குற்றவாளிகளையும், மூன்றடைப்பு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சூரப்பபுரத்தில் கடந்த 26.12.2021-ம் தேதி பார்வதி என்பவரை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளி ரவிசங்கர் என்பவரையும்,
நாங்குநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளிகள் மூன்று நபர்களை கைது செய்து குற்றவாளியிடமிருந்து 8½ பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்யவும்
நாங்குநேரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக 25000 ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்த இருவரையும்
விஜயநாராயணம் காவல்நிலைய திருவடனேரி பகுதியில் பெண்ணை தாக்கி அவரிடமிருந்து 8 பவுன் தங்க நகையை வழிப்பறி செய்த வழக்கில் குற்றவாளியை கைது செய்து 8 பவுன் நகையை பறிமுதல் செய்யவும்.
முழுஈடுபாட்டுடன் பணி செய்து குற்றவாளிகளை கைது செய்ய, உதவிய நாங்குநேரி உட்கோட்ட தனிப்படை காவல் துறையினரான தலைமை காவலர்கள் திரு.ஆறுமுகநயினார், திரு.நம்பிராஜன், முதல் நிலை காவலர் திரு.பெருமாள், இரண்டாம் நிலை காவலர்கள் திரு.ராமராஜன், மற்றும் திரு.துரைமுருகன் ஆகியோர்களை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப அவர்கள் பாராட்டி பரிசு வழங்கினார்.