காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் விஷ்ணுகாஞ்சி, காஞ்சி தாலுக்கா வாலாஜாபாத் மற்றும் சுங்குவார்சத்திரம் காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள் உத்தரவின்பேரில் காஞ்சிபுரம் உட்கோட்ட உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜீலியஸ் சீசர் அவர்களின் மேற்பார்வையில் திரு.பிரேசில் பிரேம் ஆனந்த் காவல் ஆய்வாளர் காஞ்சி தாலுக்கா காவல்நிலையம் மற்றும் திரு.கிருஷ்ணமூர்த்தி உதவி ஆய்வாளர், சிவகாஞ்சி காவல் நிலையம் ஆகியோர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றம் நடைபெற்ற இடங்களில் உள்ள சுமார் 150-திற்கும் மேற்பட்ட கணகாணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது இவ்வழக்குகளில் ஈடுபட்டது சிவகங்கை மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளான வினோத்கண்ணன் 29 மற்றும் அருண் (எ) பூச்சி இருளப்பன் 21. என தெரியவந்ததையடுத்து மேற்படி நபர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களிடமிருந்து காஞ்சிபுரம், வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம் மற்றும் திருப்பெரும்புதூர் ஆகிய 9 பகுதிகளில் களவுபோன சுமார் 20 லட்சம் மதிப்புள்ள 50 சவரன் தங்க நகைகள் மற்றும் குற்றவாளிகள் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்திய FZ இருசக்கர வாகனம் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகள் இருவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் மேற்படி இரண்டு குற்றவாளிகளும் பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டது தெரியவந்தது. மேற்படி குற்றவாளிகளை துரிதமாக விரைந்து கைதுசெய்த காவல் ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்