செங்கல்பட்டு: காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம்., கல்வி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 20வது சிறப்பு பட்டமளிப்பு விழாவில் 8428 மாணவ மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதில் பேராசிரியர் (டாக்டர்) டி. ஜி. சீத்தாராம், தலைவர், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.), சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தேர்வில் சிறப்பிடம் பெற்ற 147 பேருக்கு பதக்கங்கள் வழங்கினார். காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் [SRMIST SRM Institute of Science and Technology] சிறப்பு பட்டமளிப்பு விழா, நிறுவனத்தின் டாக்டர். டி. பி. கணேசன் அரங்கில் நடைபெற்றது.
இந்த பட்டமளிப்பு விழாவிற்கு, டாக்டர். கே. குணசேகரன், தேர்வுக் கட்டுப்பாட்டாளர், எஸ்.ஆர்.எம்., காட்டாங்குளத்தூர். டாக்டர். எஸ். பொன்னுசாமி, பதிவாளர், எஸ்.ஆர்.எம்., காட்டாங்குளத்தூர். எஸ். நிரஞ்சன், இணைத் தலைவர், எஸ்.ஆர்.எம்., ராமாபுரம் மற்றும் திருச்சி வளாகம், டாக்டர். பி. சத்தியநாராயணன், இணை வேந்தர், எஸ்.ஆர்.எம்., ஏ.பி.; டாக்டர். டி. ஆர். பாரிவேந்தர், வேந்தர் மற்றும் நிறுவனரான, எஸ்.ஆர்.எம்.; டாக்டர். ரவி பச்சமுத்து, இணை வேந்தர் (நிர்வாகம்), எஸ்.ஆர்.எம்., காட்டாங்குளத்தூர்; பேராசிரியர் சி. முத்தமிழ்ச்செல்வன், துணைவேந்தர், எஸ்.ஆர்.எம்., காட்டாங்குளத்தூர்; வி. கே. ஜெட்லி, யுஜிசி நியமனம், தேசிய சார்பு அதிபர் (நிர்வாகம்) ஒருங்கிணைப்பாளர், யூத் நேசன், டாக்டர். நிதின் எம். நகர்கர், இணைத் துணைவேந்தர், எஸ்.ஆர்.எம்., காட்டாங்குளத்தூர், ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
மேலும், டாக்டர். டி. ஆர். பாரிவேந்தர், பட்டமளிப்பு விழாவை தலைமை தாங்கினார். துணைவேந்தர் பேராசிரியர் சி. முத்தமிழ்ச்செல்வன் வரவேற்புரை ஆற்றியதுடன், ஆண்டு அறிக்கையையும் தாக்கல் செய்தார். “இன்றைய காலத்தில், வேலைவாய்ப்பு நிலைத்து நிற்க திறமையும் அறிவும் அவசியம்,” என்று தனது சிறப்புரையை துவங்கினார். பேராசிரியர் (டாக்டர்) டி. ஜி. சீத்தாராம். எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் 2024ஆம் ஆண்டு 20வது பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 8438 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இவற்றில் 6736 ஆண்களும், 1702 பெண்களும் உள்ளனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்