திருவள்ளுர் : திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராமா ரெட்டி பாளையம் முதல் காலனியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை அருகே உள்ள வீட்டில் வளர்க்கும் நாய் கடித்துள்ளது. இதில் சிறுவன் பலத்த காயங்களுடன் ஆகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இதே போல் பச்சையம்மன் கோயில் பின்புறம், தெரு நாய் ஒன்று இன்னொரு சிறுவனை கடித்துள்ளது. நல்லவேளையாக சிறு காயங்களுடான் சிறுவன் தப்பியுள்ளான். இந்த இருவேறு சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தை உண்டாகியுள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சையது அலி