திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிசம்பர் 29 அன்று ஏலம் விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மற்றும் முன்னீர்பள்ளம் காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 151 வாகனங்கள் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் டிசம்பர் 29 ஆம் தேதியும், அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 157 வாகனங்கள் டிசம்பர் 30 ஆம் தேதி அதே காவல் நிலையத்திலும் பொது ஏலம் விடப்படும்.
விரும்புவோர் டிசம்பர் 28 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையில் ரூ.5000 முன்பணம் செலுத்தி, தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவர். ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை, அதற்கான சரக்கு மற்றும் சேவை வரி (18 சதவீதம்) ஆகியவற்றை ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















