திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி வனப்பகுதியில், வனப்பகுதியினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது பழனி ஆவணி மூல வீதியைச் சேர்ந்த மாரிக்கண்ணு வயது (50), பார்வதி வயது (40), ஆகிய இருவரும் பறவைகளை பிடித்து, வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையொட்டி வனத்துறையினர் அவரது வீடுகளில் நேரடியாக சோதனை நடத்தினர். அப்பொழுது அவர் வீட்டில் 40 பச்சை கிளிகளும், 70-க்கும் மேற்பட்ட குருவி இனத்தைச் சேர்ந்த முனியாஸ், பிஞ்சஸ், பறவைகள் இருப்பது தெரிய வந்தது. உடனே அவற்றை வனத்துறையினர் கைப்பற்றி வனப்பகுதியில் பறக்கவிட்டனர். பறவைகளை சட்ட விரோதமாக பிடித்த மாரிகண்ணு, பார்வதி, ஆகிய இருவருக்கும், தலா 15,000 வீதம் 30000 அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா